News August 25, 2024

நாளை துளசி இலைகளை பறிக்காதீர்

image

நாளை துளசி இலைகளை பறிக்க வேண்டாம். கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில், ஜன்மாஷ்டமி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. ஏனென்றால் துளசி விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது. மேலும், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் நாளை விரதம் இருந்து, கிருஷ்ணரை வழிபட்டால், அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் கிருஷ்ணரே வீட்டில் குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.

Similar News

News October 17, 2025

சற்றுமுன்: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

image

TN-ல் மது பாட்டிலுக்கு ₹10 அதிகம் வசூலிக்கும் நடைமுறை நவ.30-க்குள் அமலுக்கு வருகிறது. அதாவது, காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன விலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி ₹10 அதிகம் கொடுத்து மது பாட்டிலை பெற்றுவிட்டு, காலி பாட்டிலை கொடுத்து அதனை திரும்பப் பெற வேண்டும்.

News October 17, 2025

ஒரே வீட்டில் சமந்தா, தமன்னா, ரகுல்!

image

நடிகைகள் சமந்தா, தமன்னா, ரகுல் பிரீத் சிங் 3 பேரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்! இப்படி நாங்கள் சொல்லவில்லை. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலை ஒட்டி, ஆன்லைனில் உலா வரும் அவர்களின் Voter Id தான் சொல்கிறது. ஆனால் இது உண்மையல்ல, போலி Voter Id-க்கள் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 17, 2025

முடி அடர்த்தியா வளரணுமா? Cap போடுங்க!

image

முடி வளரணும்னு Derma Roller போன்ற பொருட்களை பயன்படுத்துறீங்களா? இன்னைக்கே அதையெல்லாம் தூக்கிப்போடுங்க. அதற்கு பதிலாக, FDA-வால் அங்கீகரிக்கப்பட்ட இந்த LED Cap-களை பயன்படுத்தலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். சுமார் 120 LED Red Light-கள் கொண்ட இந்த Cap-ஐ தினமும் 10 நிமிடங்கள் போட்டால் முடி நன்றாக வளருமாம். இந்த புதிய தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!