News September 6, 2025
நாளை இரவு 9.56 மணிக்கு இதை மிஸ் பண்ணிடாதீங்க

நாளை(செப்.7) இரவு 9.56-க்கு நிகழவுள்ள முழு சந்திர கிரகணம் அதிகாலை 1.31 மணி வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ரத்த கலரில் இருக்கும் அந்த நிலவு வானில் வித்தியாசமாக காட்சியளிக்கும். இதை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னை பிர்லா கோளரங்கில் தொலைநோக்கியில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த சந்திர கிரகணம் 31.12.2028-ல் தான் நிகழும் என்பதால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.
Similar News
News September 6, 2025
BREAKING: விஜய் உடன் கூட்டணி? TTV தினகரன் பதில்

NDA கூட்டணியில் இருந்து விலகியது, 4 மாதங்களாக நிதானமாக யோசித்து எடுத்த முடிவு என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனப் பேசியதால் அவருடன் கூட்டணி என சிலர் பேசுவது தவறானது என்றார். தேர்தல் கூட்டணி விவகாரத்தை நயினார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை என சாடிய அவர், டிசம்பரில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
News September 6, 2025
Tech: செயலிகள் உங்கள் தகவல்களை திருடுகிறதா?

உங்களின் இன்ஸ்டா மெசேஜ், வாட்ஸ் அப் மெசேஜ், Call Details என தனிப்பட்ட தகவல்களை உங்கள் போனில் இருக்கும் செயலிகள் திருடுகிறதா என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம். இதற்கு, Playstore-ல் ‘Anti Spy Detector & Scanner CB’ செயலியை டவுன்லோடு செய்யுங்கள். அதை Open செய்து, Scan ஆப்ஷனை க்ளிக் செய்தால், உங்கள் ஃபோனை Spy செய்யும் செயலிகளை இது காட்டும். அதனை உடனடியாக Uninstall செய்துவிடுங்கள்.
News September 6, 2025
BREAKING: இன்று ஒரே நாளில் ₹2,000 அதிகரித்தது

<<17627852>>தங்கத்திற்கு<<>> போட்டியாக இன்று(செப்.6) வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று 1 கிராம் ₹136-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹2 அதிகரித்து ₹138-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹2,000 உயர்ந்து ₹1,38,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை நடைமுறையை மத்திய அரசு நடைமுறைபடுத்தியுள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. SHARE IT.