News April 2, 2025

இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க.. Apply Now

image

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. BE, Diploma மற்றும் B.A., B.sc, B.com, B.B.A., B.B.M., படித்தவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஏப்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 6, 2026

பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை

image

TN முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று தேர்வு முடிந்த மகிழ்ச்சியை தங்களது நண்பர்களுடன் கட்டியணைத்து பரிமாறிக் கொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் 20-ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. விடுமுறை காலத்தை உயர்கல்விக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துங்கள் மாணவர்களே..!

News April 6, 2026

அணிக்கு திரும்பும் தோனி.. CSK ஃபேன்ஸுக்கு ஹேப்பி நியூஸ்!

image

காயம் காரணமாக IPL-ல் இருந்து விலகி இருக்கும் தோனி, இன்னும் 2 நாள்களில் பிட்னஸ் டெஸ்ட் எடுக்கவுள்ளார். முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்த CSK அணி, வரும் 11-ம் தேதி DC-யை சேப்பாக்கத்தில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் நிச்சயம் தோனி விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் பிரேவிஸும் விளையாடுவார் என கூறப்படும் நிலையில், முதல் வெற்றியை CSK சென்னை சேப்பாக்கத்தில் பதிவு செய்யுமா?

News April 6, 2026

3 பாஸ்போர்ட், வெளிநாட்டில் சொத்து.. CM மனைவி மீது புகார்

image

அசாம் CM ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி 3 பாஸ்போர்டுகளை வைத்திருப்பதாகவும், வெளிநாட்டில் பல தொழில்களை நடத்திவருவதாகவும் காங்.,கின் பவன் கேரா குற்றம்சாட்டியிருந்தார். இதை குறிப்பிடாமல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்நிலையில், அவதூறு பரப்பினால் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என CM சர்மா எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!