News September 23, 2025
ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க

➤ரேசரை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது ➤ஒரே ரேசரை மாதக்கணக்கில் பயன்படுத்துவது ➤மேல் நோக்கி ஷேவ் செய்வது ➤சோப்பை போட்டு ஷேவ் செய்வது ➤அதிக அழுத்தம் கொடுத்து ஷேவ் செய்வது ➤ஷேவ் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது. இதுபோன்ற தவறுகளை செய்தால் காயம், எரிச்சல், அரிப்பு, வறட்சியில் இருந்து தொடங்கி, நோய்த்தோற்று ஏற்படலாம். இதில் நீங்க எந்த தப்ப பண்றீங்க?
Similar News
News September 23, 2025
சபரிமலையில் TN-க்கு நிலம்.. பழனியில் கேரளாவிற்கு நிலம்!

தமிழர்களுக்கு வசதி ஏற்படுத்தி தர, சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதற்கு பழனியில் இடம் கொடுத்தால், சபரிமலையில் கொடுப்பதாக கேரள அரசு கூறியதாகவும், இதற்கு தமிழக அரசும் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கண்ணகி கோயில் கட்டவும், கோயிலுக்கு செல்லும் வழிப்பாதையை செப்பனிட அனுமதிக்க வேண்டும் என கேரள அரசிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
பண மழை கொட்ட போகும் 5 ராசிகள்

அக்.18-ம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவதால் பின்வரும் ராசியினர் நன்மைகள் பெறுவர்: *மிதுனம்: பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் எச்சரிக்கை தேவை *கன்னி: சொத்து, வருமானம் பெற வாய்ப்பு, முதலீடு பலன் தரும் *விருச்சிகம்: நீண்ட காத்திருப்புக்கு பலன் கிடைக்கும், லாபம் அதிகரிக்கும் *மகரம்: பணம் சம்பாதிக்க சூழ்நிலை சாதகமாகும் *மீனம்: நீண்டகால சிக்கல்கள் தீரும், வெற்றி கிடைக்கும்.
News September 23, 2025
GST சீர்திருத்தத்தால் தமிழகம் வளர்ச்சியடையும்

GST சீர்திருத்தத்தால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். வரி குறைப்பு காரணமாக பருத்தி, தோல், காலணி, ஆட்டோமொபைல் துறைகள் பயன்பெறுவதால் திருப்பூர், கோவை நகரங்களில் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சென்னை, ஒசூர் நகரங்களில் ஆட்டோமொபைல் துறை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், வருமானம் பெருகும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.