News April 12, 2025
அனுமன் ஜெயந்தியில் இந்த தவறுகளை பண்ணிடாதீங்க!

*சமையலில், பூண்டு மற்றும் வெங்காயத்தைப் பயன்படுத்த வேண்டாம். அசைவங்களை தள்ளி வைக்கவும் *மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்க்கவும் *விலங்குகளுக்கு, குறிப்பாக குரங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதையோ அல்லது தொந்தரவு செய்வதையோ தவிர்க்கவும் *உங்கள் காணிக்கைகளில் பஞ்சாமிருதத்தை சேர்க்க வேண்டாம் *அனுமன் வழிபாட்டில் ராமரை ஒதுக்கிவிட வேண்டாம்.
Similar News
News December 9, 2025
தங்கம் விலை மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $2.78 குறைந்து $4,195.03-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $0.29 டாலர் உயர்ந்து $58.11 ஆக உள்ளது. இந்திய சந்தையில் நேற்று, தங்கம் சவரனுக்கு ₹96,320-க்கு விற்பனையானது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை குறைவால் இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 9, 2025
காங். ஒன்றும் காளான் அல்ல: செல்வப்பெருந்தகை

காங்., தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நயினார் நாகேந்திரனும், திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறும் என்று அண்ணாமலையும் கூறியிருந்தனர். இதுகுறித்து பேசிய செல்வப்பெருந்தகை, காங்., ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல, 140 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கட்சி என்றார். கொல்லைப்புறமாக சென்று பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
News December 9, 2025
திமுக அரசை தூக்கி அடிப்போம்: ஹெச்.ராஜா

திமுக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என ஹெச்.ராஜா சாடியுள்ளார். வரும் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் பிரச்னை தான் இருக்கும் என்ற அவர், இதன் மூலம் திமுக அரசை தூக்கி அடிப்போம் என தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.


