News August 26, 2025
விநாயகர் சதுர்த்தியில் இந்த தவறுகளை பண்ணாதீங்க!

வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் போது, கண்டிப்பாக இந்த தவறுகளை செய்யக் கூடாது:
1. வாங்கி வரும் விநாயகர் சிலையின் தும்பிக்கை வலது புறமாக இருக்கக்கூடாது.
2. விநாயகர் சிலையை தனியாக வைக்காமல், லட்சுமி அல்லது சிவன்- பார்வதி, முருகன் விக்ரகம் அல்லது படத்துடன் சேர்த்து வைக்கவேண்டும்.
3. வீட்டில் விநாயகரை வைத்த பிறகு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்க்கக்கூடாது. SHARE IT.
Similar News
News August 26, 2025
உக்ரைனுக்கு இனி நிதி உதவி கிடையாது: டிரம்ப்

உக்ரைனுக்கு இனி அமெரிக்கா நிதி உதவி செய்யாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் NATO நாடுகள் மூலம் தங்களை அணுக வேண்டும் எனவும், அப்படி அணுகினால் தாங்கள் NATO உடன் ஒப்பந்தம் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஏற்கனவே அதிக நிதி உதவி செய்துவிட்டதால், உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை தங்களுக்கு தர வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.
News August 26, 2025
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை

செப்டம்பரில் பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறையாகும். செப். 5-ம் ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்.26-ல் காலாண்டு விடுமுறை தொடங்குவதால் இம்மாத இறுதியில் தொடர்ச்சியாக 5 நாள்கள் விடுமுறை. இதுதவிர சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மூலம் 6 நாள்கள் லீவு கிடைக்கிறது. இதனால், மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஜாலியோ ஜிம்கானா தான்..!
News August 26, 2025
அமித்ஷா அடிக்கடி கூறியதால் சந்தேகம் வந்தது: ராகுல்

பாஜக 40- 50 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என அமித்ஷா அடிக்கடி கூறியது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு குறித்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், முதலில் அது குஜராத்தில் தொடங்கி 2014-ல் தேசிய அளவில் பரவியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வாக்கு திருட்டு தற்போது மற்ற மாநிலங்களிலும் பரவ தொடங்கிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.