News February 25, 2025
மகா சிவராத்திரி விரதத்தில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

நாளை மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் செய்யக்கூடாத காரியங்களில் சில: கெட்ட வார்த்தை பேசக்கூடாது * இரவு அதிகமாக உணவு உட்கொள்ளக் கூடாது *விரதத்தின் போது, அசைவ உணவை உட்கொள்ளக்கூடாது * எந்த ஒரு தீயப்பழக்கமும் அதாவது மது, புகைப்பிடித்தல் கூடாது * இந்த நாளில் அதிக உடல் உழைப்பைத் தவிர்ப்பது நல்லது *விரத பூஜையில் பயன்படுத்தப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Similar News
News March 3, 2026
மார்ச் 3: வரலாற்றில் இன்று

*உலக வனவிலங்கு நாள் *1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிப்பு *1940 – வரலாற்றாய்வாளர் கடம்பி மீனாட்சி நினைவு நாள் *1941 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்தநாள் *1944 – பாடகர் ஜெயச்சந்திரன் பிறந்தநாள் *1985 – நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாள் *2011 – விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்
News March 3, 2026
கமேனியின் பேத்தியும் உயிரிழப்பு (PHOTO)

இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கமேனி, அவரது மகள், மருமகன் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், கமேனியின் ஒன்றரை வயது பேத்தி ஜஹ்ரா முகமதியின் போட்டோ SM-ல் வைரலாகி வருகிறது. உலகில் உதிர்ந்த கொஞ்ச நாள்களிலேயே எந்தவித தவறும் செய்யாத அந்த குழந்தை இறந்தது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். முன்னதாக, கமேனி தங்கியிருந்த பகுதியில் 30 ஏவுகணைகள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
இனியாவது திருந்துமா திமுக அரசு? நயினார்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி அளிப்பது பற்றி TN அரசு மார்ச் 4.ல் பதிலளிக்க மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதை X பதிவில் சுட்டிக்காட்டியுள்ள நயினார், திமுக அரசு தனது தவறை உணர்ந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இனியும் இந்துக்களின் உரிமையை முடக்க திட்டமிட்டால், கோர்ட் வழங்கும் இறுதிதீர்ப்பின் போது திமுக அரசு முற்றிலும் முடங்கும் என கூறியுள்ளார்.


