News April 8, 2025
பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடாதீர்கள்: சீமான்

போராட்டக்களத்தில் தலைவனை தேடுங்கள், பொழுதுபோக்கு தளத்தில் அல்ல என சீமான் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு, கேளிக்கையில் நாட்டம் கொண்ட மக்களை புரட்சிக்கு தயார் செய்வது கடினம் எனவும், கேளிக்கை வேறு, போராட்டம், புரட்சி வேறு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், உன் மொழி உணராதவன் உன் இறைவனாக இருக்க முடியாது, உன் வலி உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 31, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 31, ஆவணி 15 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்:7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM &
1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை
News August 31, 2025
‘பைசன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு

‘பைசன்: காளமாடன்’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இதுவரை மாரி செல்வராஜ் இயக்கும் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த நிலையில், முதல்முறையாக நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
News August 31, 2025
ஒரு கவுன்சிலர் கூட ஆகல… விஜய்க்கு நயினார் பதிலடி

விஜய் விரைவில் மக்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே யாருடைய சுற்றுப் பயணமும் தேசிய ஜனநாயக கூட்டணியை பாதிக்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஒரு கவுன்சிலர், MLA கூட ஆகாத விஜயை எல்லோரையும் தோற்கடிப்பேன் என சொல்வது வேடிக்கையானது என்றும் கூறியுள்ளார். அதேபோல், எங்களது எதிரி விஜய் என கூறுவது பக்குவமில்லாத வார்த்தை எனவும் குறிப்பிட்டுள்ளார்.