News October 2, 2025

இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்த நிலையில், தமிழகத்தில் 3 நாள்களுக்கு <<17894555>>மஞ்சள் அலர்ட்<<>> எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் நண்பர்களே!

Similar News

News October 3, 2025

நீங்க எங்க சாப்பிட போறீங்க?

image

ரெஸ்டாரண்ட் – நண்பர்கள், குடும்பத்தினர், காதலர்கள் என பலரும் ஒன்றுக் கூடி மகிழும் இடமாக உள்ளது. வகைவகையான சுவையான உணவுகள், அலங்காரம், இசை, அமைதி, ஒளி என பல்வேறு அம்சங்களுடன் ஒரு முழு அனுபவத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்று வித்தியாசமான அனுபவம் தரும் ரெஸ்டாரண்ட் போட்டோஸ் மேலே உள்ளன. உங்களுக்கு எந்த மாதிரி ரெஸ்டாரண்ட் பிடிக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 3, 2025

‘சிம்பன்சிகளின் காதலி’ காலமானார்

image

உலகப் புகழ்பெற்ற விலங்கியல் விஞ்ஞானியும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான ஜேன் கூடால்(91) காலமானார். பிரிட்டனை சேர்ந்த இவரின் சிம்பன்சி குரங்குகள் பற்றிய ஆராய்ச்சி, மனிதருக்கும் குரங்குகளுக்கும் இடையேயுள்ள புதிய ஒற்றுமைகளை வெளிப்படுத்தியது. விலங்குகள் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், தன் கடைசி காலம் வரை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயல்பாடுகளில் கூடால் ஈடுபட்டு வந்தார். ஆழ்ந்த இரங்கல்!

News October 2, 2025

இரவில் தனியாக நடந்து செல்ல சிறந்த நாடுகள்?

image

இரவில் தனியாக நடந்து செல்வதற்கு எந்த நாடுகள் பாதுகாப்பானவை என்று Gallup-யின் சமீபத்திய உலகளாவிய பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு முதல் 10 இடங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளது. அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த நாடு எது?

error: Content is protected !!