News April 22, 2025
வீட்டு வாசலில் இந்த ‘3’ பொருட்களை வைக்காதீங்க..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டு வாசலில் இந்த 3 பொருட்களை வைப்பது, கேடு விளைக்கும் என நம்பப்படுகிறது: ✦வாடிய செடிகள், கொடிகள் வீட்டு வாசலில் இருப்பது துரதிஷ்டத்தை உண்டாக்கும் ✦கருப்பு அல்லது அடர் நிறத்திலான பொருட்கள் (வாசப்படி மேட், சிலைகள்) இருப்பது அதிர்ஷ்டத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது ✦உடைந்த சேதமடைந்த பொருட்கள், ஓடாத கடிகாரங்கள் வாசலில் இருந்தால், எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.
Similar News
News April 22, 2025
எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சட்டப்பேரவை வளாகத்தில் இபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினர். நயினார் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இபிஎஸ்ஸை சந்தித்து வாழ்த்து பெற்றார். இபிஎஸ்-ன் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News April 22, 2025
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் <<16177046>>இன்று (ஏப்.22)<<>> ஒரே நாளில் சவரனுக்கு ₹2,200 உயர்ந்துள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. பின்னர் முதல் வாரத்தில் சற்று இறக்கத்தைக் கண்டு அதன் பின்னர் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், இந்த மாதத்தில் மட்டும் (22 நாள்களில்) சவரனுக்கு ₹6,240 உயர்வைக் கண்டுள்ளது.
News April 22, 2025
சித்ரா பெளர்ணமி: கிரிவலப் பாதையில் சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலை சுற்றி 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. கிரிவலப் பாதையில் போதிய கழிவறைகள், குடிநீர் வசதிகளை செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பெளர்ணமியான மே 11 இரவு 8.47க்கு தொடங்கி மே 12, இரவு 10.43 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம்.