News May 7, 2025
காசு இல்லையா.. இன்று இந்த ‘Gold’ வாங்கிக்கோங்க!

இப்போது இருக்கும் விலைக்கு நாம் எப்படி தங்கம் வாங்குறது என அட்சய திருதியையில் வருத்தமாக இருக்கிறீர்களா? கவலைய விடுங்க பாஸு. இந்த கோல்டை வாங்கிக்கோங்க. யாரோ ஒரு கடைக்காரர், வியாபாரத்திற்காக யோசிச்சி பலரையும் மனமகிழ வைத்துள்ளார். Marry Gold, AVT Gold, Chakra Gold, MSS Gold இந்த கோல்டை இன்று வாங்கிக்கோங்க. இதுவும் கோல்ட் தானே சார்!
Similar News
News October 31, 2025
இன்னொரு ராட்சசனா இந்த ஆர்யன்? முழு Review

டிவி ஷோவில், தான் கொல்ல திட்டமிட்டுள்ளவர்களின் லிஸ்ட்டை கொடுக்கும் சைக்கோ வில்லனிடம் இருந்து, அவர்களை விஷ்ணு விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ‘ஆர்யன்’ ✱பிளஸ்: முதல் 20 mins அட்டகாசம். விஷ்ணு விஷால், செல்வராகவன் தேர்ந்த நடிப்பால் மிரட்டுகின்றனர். ஜிப்ரானின் BGM அசத்தல் ✱பல்ப்ஸ்: 2-ம் பாதி ஸ்லோ. ஹீரோ பிளாஷ்பேக் ஒட்டவில்லை. இன்னொரு ராட்சசன் இல்லை என்றாலும், ஆர்யன் ஓரளவு ரசிக்க வைக்கிறான்.
News October 31, 2025
காஷ்மீர் துயரத்திற்கு காங். தான் காரணம்: மோடி

தேசிய ஒற்றுமை தின விழா, குஜராத்தில் நடைபெற்றது. இதில், <<18156617>>அணிவகுப்புக்கு<<>> பின் பேசிய PM மோடி, காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற படேலின் கனவை காங்., மறந்து செயல்பட்டதே, காஷ்மீரின் துயரத்திற்கு காரணம் என குற்றஞ்சாட்டினார். பிரிவு 370-ஐ நீக்கியதால், காஷ்மீர் இன்று ஒன்றுபட்டுள்ளதாக கூறிய அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
News October 31, 2025
சிலிண்டர் வாடிக்கையாளர்களே உஷார்! இன்றே கடைசி…

நாடு முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்ட LPG இணைப்புகள் உள்ளன. இதில், 10 கோடி பேர் PMUY திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் வாங்குகின்றனர். இந்நிலையில், அனைத்து விதமான பயனாளிகளும் அக்.31-க்குள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் E-KYC-ஐ முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் நவம்பர் மாதத்தில் இருந்து மானிய தொகை டெபாசிட் செய்யப்படாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


