News April 30, 2024

தேவையின்றி வெளியே வர வேண்டாம்

image

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, அதிகளவில் தண்ணீர் குடிக்கவும், பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 5 நாள்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி வரை உயரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Similar News

News March 23, 2026

தமிழகத்தில் ₹161 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

image

TN முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ₹30.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ₹72 லட்சம் மதிப்பிலான மதுபானம், ₹6.4 கோடிக்கு போதைப் பொருள்கள், ₹92 கோடி மதிப்பிலான தங்கம் & வெள்ளி உலோகங்கள், ₹22 கோடி மதிப்பிலான இலவச பொருள்களோடு ரொக்கத்தையும் சேர்த்தால் ஒட்டுமொத்த மதிப்பு ₹161.9 கோடி ஆகும். இதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரொக்கம், நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

News March 23, 2026

‘ஜன நாயகன்’ ரிலீஸ் எப்போது?.. குழப்பத்தில் படக்குழு

image

ஜன நாயகன் படம் மே 7-ல் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், சென்சார் போர்டு மேலும் கெடுபிடி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த மறுஆய்வுக் குழு, பல இடங்களில் திருத்தம் செய்யுமாறு தெரிவித்துள்ளனர். அதனை சரிசெய்த படக்குழு, மீண்டும் சென்சாருக்கு படத்தை அனுப்பியுள்ளது. ஆனால், தற்போது கூடுதலாக கட் கொடுத்திருக்கிறார்களாம். இதனால், படக்குழு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

News March 23, 2026

கச்சா எண்ணெய் விலை சரிந்தது

image

ஈரான் மீதான தாக்குதலை 5 நாள்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10% சரிந்துள்ளது. தற்போது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை $102.26 ஆக குறைந்துள்ளது. அதேநேரம், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக சீரடையும் பட்சத்தில், கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!