News March 30, 2025
மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம்

பிற்பகல் (12 -3 மணி வரை) நேரத்தில் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் வெளியே வராமல், வீட்டிலேயே இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சு. கேட்டுக்கொண்டார். வெயில் காலத்தில் தர்ப்பூசணி நல்ல நீர்ச்சத்து உள்ள பழம் என்றும் இந்த பழத்தை உட்கொள்வது நல்லது என்றாலும், தீய நோக்கம் கொண்டவர்கள், கலப்படம் செய்வதாகவும் கூறினார். இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள் (PHOTOS)

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றை தெரிந்துகொள்ள மேலே உள்ள புகைப்படங்களை வலதுபுறம் SWIPE செய்யுங்கள். உங்கள் பொங்கல் வாழ்த்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் விஜய் அறிவித்தார்

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். ஏற்கெனவே, தமிழ்ப் புத்தாண்டு தை மாதமா, சித்திரை மாதமா என்ற சர்ச்சை இருந்து வரும் நிலையில், தன்னுடைய இந்த வாழ்த்தில் தமிழ்ப் புத்தாண்டு என அவர் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இவ்வளவு நாள் ’ஜனநாயகன்’ பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய்யிடமிருந்து இந்த ட்வீட் வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
News January 15, 2026
நாட்டை காக்கும் வீரர்களுக்கு சல்யூட்.. இந்திய ராணுவ தினம்!

இந்திய ராணுவ தினம் இன்று. தன்னலம் நீங்கி, உறவுகளை பிரிந்து, வெயில், பனி பாராது தாய் மண்ணை காக்க, பாடுபட்டுக் கொண்டிருக்கும் ராணுவத்தின் மகத்துவத்தை நினைவுகூரும் நாள். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் வீரர்களின் செயலை ‘தியாகம்’ என்ற ஒற்றை சொல்லில் அடக்கிவிடமுடியாது. அவர்களுக்காக ‘ஜெய்ஹிந்த்’ என கமெண்ட் செய்து உங்களது வீரவணக்கத்தை செலுத்துங்கள்.


