News August 20, 2025
நாளை இதை செய்ய மறக்காதீங்க

நாளை (வியாழக்கிழமை) குரு புஷ்ய யோக தினமாகும். குருவுக்குரிய வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் எப்போது இணைகிறதோ அந்த நாளே குரு புஷ்ய யோக நாள். அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் பல்கிப் பெருகும் என்ற நம்பிக்கை எவ்வாறு உள்ளதோ, அதைவிட சிறந்த நாளாக குரு புஷ்ய யோக நாளை கருதுகின்றனர். இந்த நாளில் மஞ்சள் நிற பொருள்கள் வாங்குவதை மறக்காதீங்க.
Similar News
News January 13, 2026
நாளை விடுமுறை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

ஏற்கெனவே பள்ளிகளுக்கு போகி பண்டிகை (ஜன.14) அன்று கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் அறிவித்துள்ளார். இதனால் கல்லூரிகளுக்கும் 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். எனவே, வெளியூரில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்கள் சொந்த ஊர் செல்லத் தயாராகிவிட்டனர்.
News January 13, 2026
அதிகாரத் திமிரில் செயல்படும் திமுக அரசு: சீமான்

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை TN அரசு நிறைவேற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர் போராட்டத்தில் தான் பங்கேற்க செல்வதை அறிந்ததும், அவர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை ஏவி கைது செய்தது அதிகாரத்திமிரின் உச்சம் என சீமான் சாடியுள்ளார். மாணவர்களுக்கு அறிவூட்டும் ஆசிரியர்களை அடக்கி ஒடுக்குவது தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 13, 2026
பொங்கல் நாளில் ஜன நாயகன் சென்சார் வழக்கு விசாரணை

விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட சென்சார் வழக்கில் சென்னை HC-ன் உத்தரவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் SC-ல் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை பொங்கலுக்கு பிறகு ஜன.19-ல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஜன.15-ல் இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


