News October 22, 2025
மழைக்காலத்தில் மறந்தும் இதை செஞ்சிடாதீங்க..

*ஈரமான கையோடு சுவிட்ச் on/ off செய்ய வேண்டாம்.
*மின்சார கம்பிகள் அறுந்திருந்தால், அதனருகில் செல்ல வேண்டாம்.
*இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மொபைல், கணினி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை தவிர்ப்பது நல்லது.
*குளிர்ச்சியான பொருள்களை உண்ண வேண்டாம். *பழச்சாறுகளை தவிர்த்து, பழங்களை உண்ணலாம். *பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
Similar News
News January 19, 2026
அதிமுக கூட்டணியில் இணையவில்லை: அறிவிப்பு

இன்று காலை சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் EPS-ஐ சந்தித்த கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, அதிமுக கூட்டணியில் இணைந்ததாக தகவல் வெளியானது. இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர் விளக்கமளித்துள்ளார். தான் EPS-ஐ சந்திக்கவே இல்லை என்றும், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ள அவர், அதிமுக கூட்டணியில் இணையவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.
News January 19, 2026
அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா 6.4% வளர்ச்சி அடையும்: IMF

அடுத்த 2 ஆண்டுகளில் 6.4% வளர்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா திகழும் என IMF கணித்துள்ளது. இது உலகின் வளர்ந்த நாடுகளின் பொருளாதார சராசரியை விட கணிசமாக அதிகமாகும். ஏனெனில் உலகப் பொருளாதார வளர்ச்சியானது 2026-ல் 3.3%, 2027-ல் 3.2% என்றே இருக்கும். மேலும், பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் ஆசிய நாடுகளில், இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கும் என தெரிவித்துள்ளது.
News January 19, 2026
‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. புதிய அப்டேட் வெளியானது

தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் பொங்கலுக்கு ஜன நாயகன் ரிலீசாகவில்லை. இதுகுறித்த வழக்கு ஜன.20-ல் விசாரணைக்கு வரும் நிலையில், படத்தை வெளியிட 3 தேதிகளை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. சாதகமான தீர்ப்பு வந்து தணிக்கை சான்றிதழ் பெற்றால் ஜன.30, பிப்.6 அல்லது பிப்.13-ல் ஜன நாயகன் வெளியாகலாம். ஒருவேளை ரிவைஸிங் கமிட்டிக்கு படம் சென்றால் ஏப்ரல் அல்லது மே வரை பட ரிலீஸ் தாமதமாகலாம்.


