News November 16, 2024
வாழ்க்கையில் இதை மட்டும் மறக்காதீங்க..!

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, வாழ்வில் நினைவில் கொள்ள வேண்டிய 4 விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். *உங்களுக்கு சரியென்றுபட்டால், அதை மற்றவர்களுக்கு நிரூபித்து நேரத்தை வீணாக்காதீர்கள். *நீங்கள் செய்வது தவறு என்றால், அதை சரியானது என நிரூபிக்க நேரத்தை வீணாக்காதீர்கள். *உங்களுக்கு உதவி தேவையென்றால், நேரத்தை வீணாக்காமல் கேட்டு பெறுங்கள். *வாழ்க்கை மிகவும் சிறியது. எதிர்மறையாக சிந்தித்து நேரத்தை செலவிடாதீர்கள்.
Similar News
News March 2, 2026
CM ஸ்டாலினுடைய கலாச்சாரம் இதுதானா? தமிழிசை

சுமார் ₹7 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்க TN-க்கு வந்த PM மோடியை ஒட்டுமொத்த TN-ம் உற்சாகத்தோடு வரவேற்றது என தமிழிசை கூறியுள்ளார். ஆனால் CM ஸ்டாலின் மட்டும் PM-ஐ வரவேற்க வரவில்லை என்ற அவர், இது என்ன மாதிரியான கலாச்சாரம் என கேள்வி எழுப்பினார். மேலும், TN வளர்ச்சித் திட்டங்களை வழங்க வந்த PM-ஐ, முதல்வர் வரவேற்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..

*Hall Ticket, தேவையான எழுதுப் பொருள்களை செக் பண்ணிக்கோங்க. *தேர்வு நாள்களில் காலை உணவை தவறாமல் சாப்பிடவும். எண்ணெய் பதார்த்தங்கள் வேண்டாம் *Question Paper-ஐ முழுமையாக படித்துவிட்டு, தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதி முடித்து விடுங்கள் *பாதியில் பதில் எழுத மறந்து விட்டால், உடனே டைம் பார்த்து பதற்றம் அடைய வேண்டாம். கொஞ்சம் ரிலாக்ஸாக யோசிங்க. பயம் வேண்டாம் மாணவர்களே.. வெற்றி நிச்சயம்!
News March 2, 2026
தவெகவுடன் கூட்டணியா? திமுகவுக்கு பதற்றம்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக ஆஃபர் அளித்த 25 தொகுதிகளை ஏற்க முடியாது என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது; காங்., பலத்தை தவெக அறிந்துள்ளது என்றும் பேசியுள்ளார். இது சீட்களை உயர்த்துவதற்கான ஸ்ட்ரேட்டஜி என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒருவேளை மீண்டும் தவெகவுடன் காங்., இணைய முனைப்பு காட்டுகிறதோ என்ற பேச்சு திமுக தரப்புக்கு சற்று பதற்றத்தை கொடுத்துள்ளதாம்.


