News October 5, 2025
மழைக்காலத்தில் இந்த விஷயங்களை மறக்காதீர்!

மழை வெளுத்து வாங்கும் நிலையில், டாக்டர்களின் அறிவுரையை கேளுங்க: இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன்குனியா & டைபாய்டு போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகம். அதனால் கொசுக்கள் & ஈக்களிலிருந்து பாதுகாத்து கொள்ள கொசு வலைகளைப் பயன்படுத்துங்க * கூட்டமான இடங்களில் மாஸ்க் அணியுங்க *சாப்பிடுவதற்கு முன், சோப்பு போட்டு கையை கழுவுங்க *வடிகட்டிய வெந்நீரை குடியுங்க. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 5, 2025
IND vs PAK: இந்திய அணி முதலில் பேட்டிங்

மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் இலங்கை அணியை எளிதில் வென்று இந்திய மகளிர் அணி அசத்தியிருந்தது. இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெல்ல, ஒரு லைக் போட்டு வாழ்த்து சொல்லுங்க!
News October 5, 2025
அதிரடியாக ₹1 கோடிக்கு மேல் உயர்ந்த விலை

டிஜிட்டல் கரன்சியான பிட்-காயின் கடந்த 1 மாதமாக ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தையில் பிட்காயின் மதிப்பு இன்று ₹1,10,69,353 கோடிக்கு மேல் உயர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனால் பெரிய முதலீட்டாளர்கள் இதனை வாங்குவதில் ஆர்வம் செலுத்திவருகின்றனர். இனி தொடர்ந்து பிட்காயினின் விலை ஏறுமுகத்தில் தான் இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
News October 5, 2025
ஃபாஸ்ட் டேக் விதியில் புதிய மாற்றம்

FASTag இல்லாதவர்களுக்கு டோல் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என்ற விதியில் மாற்றம் வந்துள்ளது. அதாவது, UPI மூலம் கட்டணம் செலுத்துவோருக்கு, கட்டணத்தில் இருந்து 1.25 மடங்கு தான் அதிகமாக வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு, நீங்கள் பாஸ்ட் டேக் மூலம் செலுத்தும் கட்டணம் ₹100 என்றால், பணமாக செலுத்துவோருக்கு ₹200 என்றும், UPI மூலம் செலுத்துவோருக்கு ₹125 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.