News September 26, 2025
விஜய் வாகனத்தை ஃபாலோ செய்யாதீங்க

தவெக தலைவர் விஜய் நாளை, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார். இந்நிலையில், விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம். மக்கள் சந்திப்பு நடைபெறும் பகுதிகளில் உள்ள கட்டடம், மின் விளக்கு கம்பம் உள்ளிட்டவற்றின் அருகில் செல்ல வேண்டாம். கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், சிறார்கள், பரப்புரைக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 26, 2025
USA வரிவிதிப்பு பிரச்னைக்கு விரைவில் தீர்வு!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் USA பயணம், நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, குறுகிய காலத்திற்குள் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் கூறியுள்ளது. இந்தியா மீதான கூடுதல் வரிகள், வர்த்தக பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
News September 26, 2025
வீட்டில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் செடிகள் PHOTOS

வீட்டுக்குள் காற்றில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க சில தாவரங்களை வீட்டிற்குள்ளேயே வளர்க்கலாம். இவை ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதுடன், காற்று மாசையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட சுவாச பிரச்னைகளுக்கு இவை நல்ல மருந்தாகவும் செயல்படும். மேலும், இவை மனஅமைதியையும் மேம்படுத்தும். மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அந்த செடிகள் எவை என்பதை பாருங்கள். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்கள்.
News September 26, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. அரசின் புதிய அப்டேட்

மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருப்போருக்கு DCM உதயநிதி புதிய அப்டேட் கொடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இன்னும் 2 மாதங்களில் தகுதிவாய்ந்தோருக்கு உரிமைத்தொகை ₹1,000-ஐ CM ஸ்டாலின் நிச்சயம் கொடுப்பார் என்றார். முன்னதாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அரசு கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.