News March 20, 2025
விளைநிலங்களை பிளாட் போடாதீங்க: ராமதாஸ்

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 50 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் பரப்பு விளைநிலங்கள் மனைப்பட்டாவாக மாற்றப்பட்டுவிட்டது என குறை கூறினார். முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளதாகவும், ஏரி, குளம், நீர்நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News March 21, 2025
8ஆவது முறையாக பின்லாந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது பின்லாந்து. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்காக 147 நாடுகளில் மக்களின் சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. இந்தப் பட்டியலில் இந்தியா 118வது இடத்தில் உள்ளது.
News March 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 21, 2025
கோலியின் ஷூ அணிந்து சதம் விளாசினேன்: நிதிஷ்

விராட் கோலியின் ஷூ அணிந்துகொண்டு சதம் விளாசியதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் நிதிஷ்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், “ஒருமுறை சர்ஃப்ராஸ் கானிடம் ஷூ சைஸ் என்ன என விராட் கேட்டார். அவர் 9 எனக் கூறியதும், என்னிடம் கேட்டார். நான் 10 சைஸ் எனக் கூறியதும் ஷூவை என்னிடம் கொடுத்தார். கோலியின் ஷூவை வாங்க வேண்டும் என்ற ஆசையில் அவ்வாறு கூறி பெற்றுக்கொண்டேன்” என்றார்.