News October 9, 2025
இந்த உணவுகளை சுடவைச்சி சாப்பிடாதீங்க!

இரவில் சமைத்த உணவு மீந்து போனால், அதனை காலையில் சுடவைத்து சாப்பிடும் பழக்கம் பலரின் வீடுகளிலும் உள்ளது. இருப்பினும், அப்படி சில உணவுகளை சுடவைத்து சாப்பிடக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். சுடவைப்பதால் சில உணவுகளால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதுடன், அவை வயிற்று உபாதைகளையும் உண்டாக்கும். அது என்னென்ன என தெரிந்து கொள்ள மேலே உள்ள படங்களை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. SHARE பண்ணுங்க.
Similar News
News October 9, 2025
முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்..

‘தாயும் நீயே தந்தையும் நீயே’ என இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். நிம்மதி, அமைதி, மன ஆறுதல் ஆகியவை இமயமலையின் நிசப்தமான சூழலில் கிடைக்கும் என்று ரஜினி கூறுவதுண்டு. அப்படியான பயணத்தில் ரஜினிகாந்தின் போட்டோஸ் வெளியாகி வைரலாகின்றன. மேலே swipe செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த ஆன்மிக தலத்தின் பெயரை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News October 9, 2025
ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி பரிசு: அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசாக, இலவச மளிகைத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் எண்ணெய், ரவை, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ₹570 மதிப்பிலான தொகுப்பு வழங்கப்படும் என CM ரங்கசாமி தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் அறிவிப்பு வெளியாகுமா?
News October 9, 2025
CETA ஒப்பந்தத்தால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்: PM

மும்பையில் பிரிட்டன் PM கீர் ஸ்டார்மர் மற்றும் PM மோடி தலைமையில் அதிகாரிகள் மட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. பின்னர் பேசிய PM மோடி, கீர் ஸ்டார்மர் தலைமையில் இந்தியா- பிரிட்டன் உறவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவும், இங்கிலாந்தும் இயற்கையான நட்பு நாடுகள் என்றும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்படி வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.