News August 6, 2024
ஆடி மாதத்தில் அசைவம் கூடாது.. ஏன் தெரியுமா?

ஆடி மாதத்தில் பலர் இறைச்சியைத் தவிர்ப்பார்கள். இதற்கு பல அறிவியல் காரணங்கள் உள்ளன. அதை இங்கு அறிவோம். ஆடி மாதம் மழைக்காலத்தில் வருகிறது. இந்த நேரத்தில் கோழிகள் மற்றும் பிற விலங்குகள் நோய்களுக்கு ஆளாகின்றன. சூரிய ஒளியின் பற்றாக்குறையால், உடலின் செரிமான அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் இறைச்சி சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News January 22, 2026
பிரேமலதாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!

NDA கூட்டணி முழு வடிவம் பெற இன்னும் 24 மணிநேரமே இருக்கிறது. நாளை PM மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற அதிமுக-பாஜக மும்முரமாக செயல்படுகின்றன. தற்போது வரை தேமுதிகவும், புதிய தமிழகமும் தங்களது முடிவை அறிவிக்காமல் களத்திற்கு வெளியே உள்ளனர். இன்று புதிய தமிழகம் NDA-வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பிரேமலதா அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் மெளனம் காக்கிறார்.
News January 22, 2026
கவர்னர் செயலால் அமைச்சர் அதிரடி முடிவு!

கவர்னர் RN ரவியின் சர்வாதிகார போக்கை கண்டிக்கும் விதமாக சென்னை பல்கலை., பட்டமளிப்பு விழாவை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்துள்ளார். இதுகுறித்து பேசுகையில், நாட்டின் உயர்கல்வியில் TN முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கவர்னர் தனது அறிக்கையில், உயர்கல்வியில் தமிழகம் தாழ்ந்து வருவதாக கூறியதையும், சட்டமன்ற மரபை மீறியதையும் கண்டித்து இந்த விழாவை புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.
News January 22, 2026
பதவியிலிருந்து உதயநிதி நீக்கப்பட வேண்டும்: BJP

தமிழ்நாட்டில் EPS தலைமையிலான கூட்டணி, ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். EPS-யுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் குடும்ப ஆட்சி மீது அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளதாகவும் சாடியுள்ளார். <<18913574>>மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும்<<>> வகையில் பேசும் உதயநிதி, அரசு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


