News March 3, 2025
அநாகரிக அரசியல் செய்யாதீங்க வன்னி அரசு

இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் என காரணம் காட்டி விஜய் பாதுகாப்பு பெற்றதாக வன்னி அரசு பேச்சுக்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. அறமற்ற பொய்யை வன்னி அரசு பேசியுள்ளார். சிஏஏ சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்கும் விஜய், கட்சியின் பல முக்கிய பொறுப்புகளில் இஸ்லாமிய உறவுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அநாகரிக அரசியலை விட்டுவிட்டு, நாகரிக அரசியல் பாதையில் பயணம் செய்யுங்கள் என சாடியுள்ளது.
Similar News
News March 3, 2025
பிலிப்ஸிடம் சண்டை போடும் கோலி ஃபேன்ஸ்… ஆனா…

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வெறி பிடித்தவர்கள் போல. நேற்று க்ளென் பிலிப்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்து கோலியை அவுட்டாக்கினார். உடனே சோஷியல் மீடியாவில் கோலி ரசிகர்கள் கம்பு சுத்த தொடங்கிவிட்டனர். பிலிப்ஸின் அக்கவுண்டில் சரமாரியாக கமெண்ட்டுகளை செய்கிறார்கள். ஆனால், அது எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிலிப்ஸின் சோஷியல் மீடியா பேஜ் என அவர்களுக்கு தெரியவில்லை. இதுக்கு தான் படிங்கடா’னு சொல்றது!
News March 3, 2025
2026 தேர்தல் அதிமுக கூட்டணி.. பாஜகவுக்கு மட்டும் ‘நோ’

2026 தேர்தலுக்கு தற்போதே கூட்டணி கணக்கை திமுக, அதிமுக வகுக்கத் தொடங்கியுள்ளன. திமுக தனது கூட்டணியைத் தக்க வைக்க முயற்சிக்கும் நிலையில், அதிமுக மெகா கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளை இழுக்கவும், விஜய் கட்சியை சேர்க்கவும் ஆர்வம் காட்டும் அதிமுக, பாஜகவை மட்டும் கூட்டணியில் சேர்க்கக் கூடாதென உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
News March 3, 2025
வங்கி டெபாசிட் ரூ.83.44 லட்சம் கோடியாக சரிந்தது

FDஇல் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவதால், வங்கியில் நடப்புக் கணக்கு, சேமிப்பு கணக்கு மீதான டெபாசிட் சரிந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் ரூ.83.50 லட்சம் கோடியில் இருந்து ரூ.83.44 லட்சம் கோடியாக டெபாசிட் குறைந்துள்ளது. இது கடந்தாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.5,900 காேடி குறைவு. 2023இல் 9 மாதங்களில் ரூ.78.27 லட்சம் கோடி- ரூ.78.69 லட்சம் காேடியாக (ரூ.42,000 கோடி) அதிகரித்திருந்தது.