News October 28, 2025
இன்று இரவு இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

தீவிரமடைந்துள்ள மொன்தா புயல் இன்றிரவு ஆந்திராவின் பாலகொல்லு அருகே கரையை கடக்கும் என IMD கணித்துள்ளது. இரவு 9 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கும் என்றும், இரவு 11 மணிக்குள் முழுவதுமாக கரையை கடந்துவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள்!
Similar News
News October 29, 2025
Cinema Roundup: விரைவில் ‘பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள்

*’பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள் வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல். *யஷ்-ன் ‘டாக்ஸிக்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை ரீ-ஹூட் செய்ய படக்குழு முடிவு. *மிருணாள் தாக்கூரின் ‘டகாய்ட்’ படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. *மாரி செல்வராஜுக்கு ‘இயக்குநர் திலகம்’ என வைகோ பட்டம் சூட்டியுள்ளார்.
News October 29, 2025
அரசியலில் குதிக்கிறாரா MS தோனி?

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணையமைச்சர் ரக்ஷா கட்சே, தோனியை சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள MSD-ன் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது, விளையாட்டில் உளவியல் ரீதியான பயிற்சிக்கான மேம்பாடு & விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துதல் குறித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது.
News October 29, 2025
அக்டோபர் 29: வரலாற்றில் இன்று

*உலக பக்கவாத நாள்.
*1832 – பெங்களூரில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் படையினருக்கு எதிராக நடத்தப்படவிருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
*1886 – பிரிட்டிஷ் இந்திய அரசு – திருவாங்கூர் மன்னர் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.
*1931 – கவிஞர் வாலி பிறந்தநாள்.
*1950 – கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தொடர் கல்கி இதழில் முதல்முறையாக வெளிவர ஆரம்பித்தது.


