News April 14, 2025

காலை 11 மணி முதலே வெளியே வராதீங்க

image

தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலை இயல்பை விட 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, மக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவு தண்ணீர், மோர் போன்றவறை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

நடிகை நந்தினி தற்கொலை.. பரபரப்பு தகவல்

image

கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் தங்கியிருந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் கைப்பற்றியுள்ளது. அதில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் தெரியவரும்.

News December 30, 2025

பல்கலை., மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி

image

சென்னை பல்கலை., துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா 2022-ல் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ரவி அதனைத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2023-ல் கவர்னர் அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவை 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த முர்மு, தற்போது TN அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

News December 30, 2025

சம்மட்டி அடி கொடுக்கிறார் CM ஸ்டாலின்: கனிமொழி

image

மதக்கலவரம், காழ்ப்புணர்ச்சியை தவிர வேறு எந்த அரசியலையும் பாஜக செய்யவில்லை என கனிமொழி கூறியுள்ளார். இதற்கு CM ஸ்டாலின் சம்மட்டி அடி கொடுத்து வருவதால், அவரது பின்னால் அனைவரும் அணி திரள்வோம் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும் சங்கிக் கூட்டமும், அடிமைக் கூட்டமும் மகளிருக்கு பாதுகாப்பு இல்லை என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள் என கனிமொழி சாடியுள்ளார்.

error: Content is protected !!