News March 30, 2025
துரோகம் செய்யாதீங்க: ஆர்.கே.செல்வமணி

சண்டைக்கும், சமாதானத்திற்கும் நாங்கள் தயார் என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களுக்கு சென்று படப்பிடிப்பு எடுப்பதால் பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் எந்த தொழிலையும் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் செய்ய வேண்டாம். வெளி மாநிலத்திற்கு பதில் தமிழ்நாட்டிலேயே படப்பிடிப்பை நடத்தினால் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.
Similar News
News January 18, 2026
யாருடன் கூட்டணி? மீண்டும் பிரேமலதா ஆலோசனை!

திமுக, அதிமுக, தவெக என 3 வாய்ப்புகள் இருப்பதால் எந்த பக்கம் செல்வது என முடிவெடுக்காமல் பிரேமலதா யோசனையில் உள்ளார். அதனால் தான் கடந்த 9-ம் தேதி கூட்டணி முடிவை வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். இந்நிலையில், நேற்று MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி தேமுதிக அலுவலகத்தில் MGR சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், முக்கிய நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
News January 18, 2026
கேஸ் சிலிண்டர் சீக்கிரமாக காலியாகாமல் இருக்க…

*பர்னர் சுத்தமா இருக்கணும். அழுக்கு இருந்தால், நெருப்பு அதிகமாக தேவைப்படும் *தட்டையான பாத்திரத்தை பயன்படுத்தும் போது, நெருப்பு சமமாக பரவி சீக்கிரமாக சமையல் ஆகும் *அரிசி, பருப்பு, சுண்டல், மொச்சை போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வேகும் *பாத்திரத்தை கழுவிய உடனே ஈரத்துடன் அடுப்பில் வைக்க வேண்டாம். அதே போல, fridgeல் இருந்து எடுத்தவுடன் காய்கறிகளை அடுப்பில் போட வேண்டாம்
News January 18, 2026
விடுபட்டவர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு ₹3,000

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாத குடும்பங்கள் நாளை(ஜன.19) முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைகளில் ஜன.14-ம் தேதி வரை 2.15 கோடி குடும்பங்கள் மட்டுமே பொங்கல் பரிசை பெற்றுக் கொண்டனர். விடுபட்ட 7 லட்சம் குடும்பங்களுக்கு ₹3,000 ரொக்கம், பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முழுக் கரும்பு வழங்கப்படவுள்ளன. SHARE IT.


