News February 16, 2025
தலைக்கனம் வேண்டாம்: உதயநிதி எச்சரிக்கை

மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காததால், நிதி அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது TN அரசியலில் தீயை பற்ற வைத்திருக்கிறது. Dy.CM உதயநிதி இந்தியை ஏற்குமாறு மிரட்டுவதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி, தலைக்கனம் வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். பல மொழிகளை போற்றினால் இந்தியா ஒரே நாடு; ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும் என சீமானும் விமர்சித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

காஞ்சி: உத்திரமேரூர் ஒன்றியம் மானாமதி கண்டிகையைச் சேர்ந்தவர் தாமஸ்(81). இவர் கீரை வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து, வந்தவாசி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 28, 2025
காலை உணவில் கட்டாயம் இது இருக்கணும்..

காலை உணவில் தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ப்ரோ-பயோடிக் இருப்பதால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை இது அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை குறையும், வயிற்று பிரச்னைகள் வராது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், நல்ல மனநிலையில் இருப்பீர்கள், மூளை செயல்பாடு நன்றாக இருக்கும் என டாக்டர்கள் சொல்கின்றனர். மொத்தத்தில் உங்கள் முழு உடலையும் பாதுகாக்கும் சூப்பர் ஃபுட்டாக தயிர் செயல்படுகிறது. SHARE.
News November 28, 2025
நேபாள புதிய ரூபாய் நோட்டில் இந்திய பகுதிகள்

நேபாளத்தில் நேற்று புதிய ₹100 நோட்டு வெளியிடப்பட்டது. அதில், உத்தராகண்டின் லிபுலேக், லிம்பியாதுரா & காலாபானி பகுதிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. முன்னதாக, 2020-ல், முன்னாள் PM சர்மா ஒலி தலைமையிலான அரசு, இந்த 3 பகுதிகளையும் உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையிலும், அந்த வரைபடம் அந்நாட்டு பார்லிமென்டில் அங்கீகரிக்கப்பட்டது.


