News April 10, 2025
தர்பூசணியை பார்த்து பயம் வேண்டாம்

சமீபத்தில் வெளியான சர்ச்சை வீடியோவால் தர்பூசணியை வங்க மக்கள் அச்சமடைந்துள்ளனர். உண்மையில் தர்பூசணி கோடை காலத்தில் சிறந்த பழம். தர்பூசணியில் உள்ள அமினோ அமிலம் ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, அதேபோல் லைகோபீன், சிட்ரலன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. தர்பூசணியில் 96% நீர் இருப்பதால், உடலுக்குத் தேவையான நீர் சத்தையும் அளிக்கிறது.
Similar News
News April 18, 2025
Retire ஆகும் நேரத்தில் ரோஹித்… சேவாக் சொன்ன பாய்ண்ட்

ரோஹித் ஓய்வு பெறப்போகும் நேரத்தில், ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தருணங்களை கொடுக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். IPL 2025-ல் ரோஹித்தின் பெர்ஃபாமன்ஸ் சீரானதாக இல்லை எனவும், அவர் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறுகிறார் என்றும் சேவாக் கூறினார். நடப்பு IPL தொடரில் இதுவரை ரோஹித் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயமே. Retire ஆவதற்கு முன், ரோஹித் மிரட்டலான ஒரு இன்னிங்ஸை ஆடுவாரா?
News April 18, 2025
முதுநிலை நீட் தேர்வு: மே 7 வரை விண்ணப்பிக்கலாம்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத, மே 7-ம் தேதி வரை <
News April 18, 2025
அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக் கூடாது என CM ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின்போது பொதுவெளியில் பேசும்போது மிகவும் கவனமாகப் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மூத்த அமைச்சர்கள் <<16019356>>துரைமுருகன்<<>>, <<16061152>>பொன்முடி<<>> ஆகியோர் அண்மையில் பொதுவெளியில் மாற்றுத்திறனாளிகள், சைவம், வைணவம், பெண்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது.