News July 6, 2025

எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்காதீர்கள்…

image

செய்தாக வேண்டும் என முடிவெடுத்து தொடங்கிய காரியத்தை பாதியில் நிறுத்துவது, நாமே தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம். செய்ய முடியும் என நினைத்தால், அதனை செய்வதற்கான வழியைத் தேடுங்கள். பாதியில் நிறுத்துவதற்கு முன், ஏன் – எதற்காக – எங்கிருந்து தொடங்கினோம் என்பதை ஒரு முறை நினைத்து பாருங்கள். முயற்சியை நீங்கள் கைவிடும் போது தான், வெற்றி உங்களைக் கைவிடும். நம்பிக்கையுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம்!

Similar News

News July 6, 2025

திருச்செந்தூர் கோவிலுக்கு ₹206 கோடி வழங்கிய சிவ் நாடார்!

image

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் சீரமைப்புப் பணிகளுக்காக, தொழிலதிபர் சிவ் நாடார் ₹206 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார். சிவ் நாடாரின் ‘வாமா சுந்தரி அறக்கட்டளை’ மூலமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 7, திங்கட்கிழமை) திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 6, 2025

தமிழகத்தை உலுக்கிய தம்பதியின் தற்கொலை!

image

வட்டார போக்குவரத்து அலுவலர்(RTO), தனது மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த சுப்பிரமணியன்(54) திருச்சி RTO அலுவலக பறக்கும் படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா(50), அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார். இவர்களது மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

News July 6, 2025

BREAKING: விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

image

வரும் வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமை விமானக் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். இதனால் வெள்ளியன்று சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமான கட்டணம் ₹4000-ல் இருந்து ₹13,000 வரை உயர்ந்துள்ளது. பண்டிகை காலங்களில், முகூர்த்த நாள்களில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!