News August 30, 2025

இனி விஜய் பற்றி கேட்காதீங்க.. கொந்தளித்த பிரேமலதா!

image

ECI, கோர்ட் இணைந்து ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். நெல்லையில், பேசிய அவர், தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார். மேலும், DMDK, TVK-வுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு, இனி தன்னிடம் விஜய் பற்றி எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஆவேசமாக கூறினார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Similar News

News August 30, 2025

RCB Cares: ₹25 லட்சம் நிவாரணம் அறிவித்த RCB!

image

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு RCB நிர்வாகம் ₹25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. ‘RCB Cares’ என்ற பெயரில் பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களுக்கான நீண்ட கால Commitment-ல் இது தொடக்கம் மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த முடிவு குறித்து நீங்க என்ன சொல்றீங்க?

News August 30, 2025

மனுக்களை வாழ்க்கையாக பாருங்கள்: உதயநிதி அட்வைஸ்

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்தது அரசியல் களத்தில் பரபரப்பானது. இதனிடையே, இத்திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை, மனுக்களாக பார்க்காமல் பொதுமக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும் என கூறினார். மனுக்களுக்கு தீர்வு காண முடியவில்லை என்றால், அதற்கான காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

News August 30, 2025

Online-ல் பணம் இழந்துட்டீங்களா? இத செய்யுங்க

image

டிஜிட்டல் கொள்ளையர்கள் மக்களிடமிருந்து டிசைன் டிசைனாக பணத்தை திருடுகின்றனர். இதில் பணத்தை இழந்தால் அதை மீட்க வழி இருக்கிறது. தேசிய சைபர் க்ரைமின் 1930 எண்ணிற்கு அழைத்து புகாரளியுங்கள். பணம் பறிபோன 1 மணி நேரத்திற்குள் புகாரளித்தால் அதனை மீட்பது எளிது. வங்கி கணக்கு, பணம் பறிபோன நேரம், தொகை ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். http://cybercrime.gov.in – லிலும் புகாரளிக்கலாம். SHARE.

error: Content is protected !!