News April 7, 2025
ஒரே ஆண்டில் ₹2,243 கோடி.. பாஜகவுக்கு குவிந்த நன்கொடை

2023-24 நிதியாண்டில் பாஜக ₹2,243 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது. தேசிய கட்சிகளில் பாஜகவே அதிக நன்கொடை பெற்றிருப்பதாகவும், காங்கிரஸ் ₹281.48 கோடி பெற்றுள்ளதாகவும் ADR கூறியுள்ளது. 2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 211.72%, காங்கிரஸுக்கு 252.18% அதிக நன்கொடை கிடைத்து உள்ளதாகவும் ADR குறிப்பிட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
அவர்களின் இலக்கு நேரு அல்ல: சோனியா காந்தி

சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள், நேருவை நாட்டின் எதிரியாக கட்டமைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக சோனியா காந்தி சாடியுள்ளார். நேருவை வரலாற்றில் இருந்து நீக்குவது அவர்களது முக்கிய இலக்கு அல்ல. அவர் ஏற்படுத்திய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை சிதைப்பதுதான் இலக்கு. நேருவை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது என்பது வேறு, இது வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

<
News December 6, 2025
திங்கள்கிழமை பள்ளிகள் இங்கு விடுமுறை

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி, டிச.8-ம் தேதி (திங்கள்கிழமை) காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்நாளில், அங்குள்ள 113 பள்ளிகள் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழகத்தில் டிச.12 வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மழைப்பொழிவை பொறுத்து பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.


