News April 29, 2025
ராணுவத்திற்கு நிதியுதவி செய்யுங்கள்: Scam Alert

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை பயன்படுத்தி மோசடி நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள் என வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
Similar News
News April 29, 2025
2,180 குடும்பங்கள் மொத்தமாக அழிப்பு

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 52,243 பாலஸ்தீனியர்களில் 65% பேர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 18,000 குழந்தைகள், 12,400 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,180 குடும்பங்களை மொத்தமாக அழித்ததாகவும் கூறியுள்ளது. மேலும், 1,400 டாக்டர்கள், 212 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை பேர் உயிரிழந்தும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை.
News April 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 321 ▶குறள்: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். ▶பொருள்: எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
News April 29, 2025
பாஜகவில் இணையும் ப்ரீத்தி ஜிந்தா?

உங்களது சமீபகால பதிவுகள் பாஜக சார்பாக இருக்கிறதே, நீங்கள் அக்கட்சியில் இணைய போகிறீர்களா என ரசிகர் ஒருவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் X தளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகை பதிலளித்துள்ளார். மேலும், கோயில், மகா கும்பமேளாவிற்கு செல்வது, தன்னுடைய அடையாளத்தை நினைத்து பெருமைப்படுவது என்பது பாஜகவில் சேர்வதற்கான அறிகுறி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.