News March 27, 2024
சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஐபிஎல் அணிகள்

இந்தியாவில் நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடர், ரசிகர்களிடையே களைகட்டி வருகிறது. இதுவரை நடந்த 7 போட்டிகளிலும், சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வென்றுள்ளன. அதன்படி, CSK-2, RR-1, KKR-1, PBKS-1, RCB-1, GT-1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்துள்ளது. சொந்த மண்ணில் ரசிகர்கள் கொடுக்கும் அளவில்லா ஆதரவு, அணிகளுக்கு தனி பலத்தை கொடுக்கும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
Similar News
News November 21, 2025
ஆன்மிக செல்வந்தர்களாக இருக்க வேண்டும்: AR ரஹ்மான்

உங்கள் ஈகோ போய்விட்டால், நீங்கள் கடவுளை போல வெளிப்படையானவராக மாறுகிறீர்கள் என AR ரஹ்மான் கூறியுள்ளார். சூஃபியிசம் பற்றி பேசிய அவர், உங்களின் சுயத்தை மறைக்கும் காமம், பேராசை, பொறாமை, முன்முடிவு என அனைத்தும் இறக்க வேண்டும் என்றார். நாம் அனைவரும் ஆன்மிக ரீதியாக செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்ற ரஹ்மான், ஆன்மிக செல்வம் வரும்போது, பொருள் செல்வம் பின்தொடரும் என்றும் கூறினார்.
News November 21, 2025
இந்திய போர் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு

துபாய் ஏர் ஷோவில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்ததாக IAF அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விமானியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் IAF தெரிவித்துள்ளது. மேலும், விபத்து குறித்து விசாரிக்க விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. துபாயில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 21, 2025
RAIN ALERT: 28 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, செங்கை, சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூர், திருப்பத்தூர், தி.மலை, வேலூர், விழுப்புரத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. உங்க ஊரில் இப்போ மழையா?


