News March 18, 2024

உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பில்லை

image

நாட்டில் மின்சார வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க புதிய மின்வாகன கொள்கை பெரிதும் உதவும் என்று மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “புதிய மின்வாகன கொள்கை, உயர் விலை கார்கள் & ஆடம்பர வாகனங்களுக்கானது. எனவே, இது உள்நாட்டு தயாரிப்பாளர்களை பாதிக்க வாய்ப்பில்லை. ஏதேனும் பாதிப்பு இருந்தாலும், குறைவாகவே இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Similar News

News February 4, 2026

ஷாருக், சல்மான் போல் ஆவேன்: லெஜண்ட் சரவணன்

image

தான் ஒருநாள் ஷாருக்கான், சல்மான் கான் போல ஆவேன் என்று சிறுவயதிலேயே தனது தாயிடம் கூறியதாக லெஜண்ட் சரவணன் பேசியுள்ளார். தன்னுடைய ‘லீடர்’ பட விழாவில் பேசிய அவர், சிறுவயதிலிருந்தே சினிமா மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் சில காரணங்களால் எனது தந்தையின் தொழிலைக் கவனிக்க வேண்டியதாகிவிட்டது. மேலும், ஜவுளி, சினிமா எதுவானாலும் 100% உழைப்பை கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

BREAKING: அரசு அறிவித்தது.. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி

image

TN-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012-ல் 53,022 ஆக இருந்த பாதிப்பு, கடந்தாண்டில் அது இரு மடங்காக(1,00,097) அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8,505, காஞ்சியில் 7,295, வேலூரில் 6,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் அதிகளவில் மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News February 4, 2026

75% சொத்தை நன்கொடையாக வழங்கும் அனில் அகர்வால்!

image

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால், தனது மொத்த சொத்துக்களில் 75% ஐ சமூகத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். சுமார் ₹41,400 கோடி சொத்து மதிப்புடைய அவர், இனி நிறுவனத்தின் அறங்காவலராக பணியாற்ற உள்ளதாகவும், மறைந்த தனது மகன் நினைவாக கல்வி, சுகாதாரத் துறைகளில் ₹15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். PM மோடியை சந்தித்த பிறகு இந்த முடிவை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

error: Content is protected !!