News October 11, 2024

இதை செய்தால் இலவச தையல் இயந்திரம் கிடைக்கும்

image

சத்தியவாணி அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டம் என்ற பெயரில் தமிழக அரசால், கைம் பெண்கள், ஏழை, மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான தகுதிகள்: வயது 20-40 இருக்க வேண்டும். தையல் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹72,000-க்கு மிகாமல் இருத்தல் அவசியம். இ-சேவை மூலம் அரசுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News August 17, 2025

உடனே ஓடிவர திமுகவினர் என்ன பழனிசாமியா? ஸ்டாலின்

image

உறவினர் வீட்டில் ED ரெய்டு என்றால், ஓடிவந்து கூட்டணியில் சேர்வதற்கு நாங்கள் என்ன பழனிசாமியா என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்களை மிரட்ட நினைப்பவர்கள் இன்று மிரண்டு போயிருப்பதாகவும் கூறினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என எச்சரித்ததோமோ அதுவெல்லாம் நடப்பதாகவும், ஒத்துவராத எதிர்கட்சிகள் ED-யை கொண்டு மிரட்டப்படுவார்கள் என கூறியிருந்தோம் அதுவும் நடப்பதாக கூறினார்.

News August 17, 2025

ஆகஸ்ட் 17: வரலாற்றில் இன்று

image

1934 – முரசொலி மாறன் பிறந்த தினம்.
1945 – ஜப்பானிடமிருந்து இந்தோனேசியா விடுதலை பெற்ற நாள்.
1947 – இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.
1962 – விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த தினம்.
1963 – திரைப்பட இயக்குநர் சங்கர் பிறந்த தினம்.
2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

News August 17, 2025

திருமா மரியாதையை காப்பாத்தனும்: EPS அறிவுரை

image

திமுகவின் பாவமூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். செங்கம் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், மக்கள் மத்தியில் திருமாவளவனுக்கு ஒரு மரியாதை உள்ளது என்றும், அதனை அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றார். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டு, வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை எல்லாம் திருமாவளவன் பேசுவதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!