News August 4, 2025
தூங்கும் போது இதை செய்தால் HEART ATTACK-ஐ தடுக்கலாம்

உங்கள் தூங்கும் பழக்கத்தில் 2 நல்ல மாற்றங்களை செய்வதன் மூலம், ஹார்ட் அட்டாக் உள்பட இதயநோய் வரும் ஆபத்தை 26% குறைக்கலாம் என்கிறது அண்மை ஆய்வு. 1)தினசரி போதுமான நேரம் தூங்க வேண்டும் 2)தினசரி ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும் என்பதே அந்த 2 பழக்கங்கள். மேலும், தூங்கும்முன் போன், டிவி பார்ப்பதை தவிர்ப்பது, தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே சாப்பிடுவது, பெட் ரூம் சுத்தம் ஆகியவையும் நோய்களை தடுக்கும்.
Similar News
News August 5, 2025
ராசி பலன்கள் (05.08.2025)

➤ மேஷம் – வரவு ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – நன்மை ➤ கடகம் – உதவி ➤ சிம்மம் – சுபம் ➤ கன்னி – வாழ்வு ➤ துலாம் – கவனம் ➤ விருச்சிகம் – நலம் ➤ தனுசு – பயம் ➤ மகரம் – லாபம் ➤ கும்பம் – ஜெயம் ➤ மீனம் – புகழ்.
News August 5, 2025
இருவருக்கு தொடர் நாயகன் விருது: காரணம் என்ன?

ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் ஹாரி ப்ரூக், சுப்மன் கில் தொடர் நாயகர்களாக தேர்வாகினர். இந்நிலையில் இருவீரர்கள் தேர்வானதற்கான காரணம் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாகவே இத்தொடரில் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்கள் எதிரணி பயிற்சியாளரால் தேர்வு செய்யப்படுகிறார்கள் . அதன்படி இங்கி., பயிற்சியாளர் மெக்கல்லம் கில்லையும், கம்பீர் புரூக்கையும் தேர்வு செய்துள்ளனர்.
News August 4, 2025
மாணவர்களுக்கு வாரந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு

அரசு பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரந்தோறும் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் மொழிப்பாடம், கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் மூலம் 6 மாத பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அந்தந்த வாரம் நடத்தப்படும் பாடத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களே, ரெடியா!