News February 17, 2025
இதை செய்தால் கேன்சரை தடுக்கலாம்

புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளை அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி பட்டியலிட்டது. இந்த மூன்று விஷயங்களை தவிர்த்தாலே கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் 40% குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவை என்னவென்றால், 1) புகை பிடித்தல் 2) மது அருந்துதல் 3) அதீத உடல் எடை. இந்த மூன்றையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டால், புற்றுநோய்க்கு ஆளாகாமல் நிம்மதியாக வாழலாம். என்ன மக்களே ரெடியா?
Similar News
News January 11, 2026
தவறை ஒப்புக்கொள்கிறோம்: X

Grok AI மூலம் வெளியான அநாகரீக போட்டோ மற்றும் வீடியோக்கள் குறித்து இந்திய அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், தனது தவறை ஏற்றுக்கொள்வதாக X தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் இந்திய சட்டங்களை முழுமையாக பின்பற்றுவதாகவும் அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக, 600 கணக்குகள் உட்பட 3,500 உள்ளடக்கங்கள்(Contents) நீக்கப்பட்டதாக X குறிப்பிட்டுள்ளது.
News January 11, 2026
பணத்தை கையாள சில ஈஸி டிப்ஸ்

பணம் நம் வாழ்க்கையில் முக்கியமான வளம். அதை செலவிடுதல், சேமித்தல், முதலீடு செய்தல் ஆகிய வழிகளில் சரியான சமநிலையுடன் மேற்கொள்ள வேண்டும். இளம் வயதிலேயே இந்த பழக்கங்களை வளர்த்துக் கொண்டால், எதிர்காலம் பொருளாதார ரீதியாக உறுதியானதாக இருக்கும். பணத்தை கையாளுவதில் என்னென்ன பழக்கங்கள் அவசியம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 11, 2026
கனமழை.. 7 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் நாளை 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், குடை, ரெயின் கோட்டை மாணவர்கள் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.


