News October 21, 2025

இதை செய்தால் குழந்தைகளின் இதயத்துக்கு ஆபத்து!

image

உங்கள் குழந்தைகள் எப்போதும் போன், லேப்டாப், கேம்ஸ் என இருக்கிறீர்களா? இதனால் குழந்தைகளின் இதயம் நாளுக்கு நாள் பலவீனமாகி வருவதாக ஆய்வுகள் சொல்லுது. எப்போதும் Screen முன்பே உட்கார்ந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ், கொலஸ்ட்ரால் பிரச்னை அதிகரிக்கரிக்கிறதாம். இதனால், இதய பிரச்னைகள் வருவதற்கான ரிஸ்க் அதிகமாக இருக்கிறது. எனவே உங்கள் குழந்தைகளின் Screen Time-ஐ குறையுங்கள். SHARE.

Similar News

News October 22, 2025

பெயரில் மாற்றம் செய்த ஹன்சிகா

image

ஹன்சிகாவின் விவாகரத்து சர்ச்சை ஒரு பக்கம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, அவர் திடீரென தன்னுடைய பெயரில் மாற்றம் செய்துள்ளார். அதாவது, ஆங்கிலத்தில் ‘Motwani’ என்பதை தற்போது ‘Motwanni’ என மாற்றம் செய்து இருக்கிறார். நியூமராலஜி படி பெயரை மாற்றினால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என ஹன்சிகா நம்புகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

News October 22, 2025

இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தொடர் கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுார், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வீட்டில் பத்திரமாக இருங்கள்..!

News October 22, 2025

டிரம்ப் எச்சரிக்கைக்கு PM மவுனம் காப்பது ஏன்? காங்.

image

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கும் நிலையில் PM மோடி அமைதி காப்பது ஏன் என ஜெய்ராம் ரமேஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் டிரம்புக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்காமல் ஏன் வெளியுறவுத்துறை பின் மோடி மறைந்துகொள்கிறார் எனவும் காங்கிரஸ் சாடியுள்ளது. இங்கு மட்டும் சத்தமாக பேசும் மோடி வெளிநாட்டினரிடம் அடங்கி போவதாகவும் காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

error: Content is protected !!