News April 4, 2025
குழந்தையை கடித்துக் குதறிய நாய்

ஓசூரில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த 3 வயது குழந்தையை தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்துள்ள அக்குழந்தை ஓசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தும் தெருநாய்கள் தொல்லையில் இருந்து முதல்வர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Similar News
News April 12, 2025
அடகு வைத்ததாக விமர்சனம்: பதிலடி கொடுத்த இபிஎஸ்

அதிமுகவின் கூட்டணி அறிவிப்பு ஸ்டாலினுக்கு இடி போல் இறங்கியிருப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். 2 ரெய்டுகளுக்கே அதிமுகவை அடகு வைத்துவிட்டதாக CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள இபிஎஸ், காவிரி உரிமையை பெங்களூருவிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த திமுக தலைவர், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என விமர்சித்துள்ளார்.
News April 12, 2025
துருவ் விக்ரமுக்கும் அனுபமாவுக்கும் சம்திங் சம்திங்!

நடிகர் துருவ் விக்ரமும், நடிகை அனுபமா பரமேஸ்வரனும் ‘டேட்’ செய்கிறார்கள் என்ற செய்தி வைரலாகி வருகிறது. அனுபமா பெயரில் ‘Blue Moon’ என்ற Spotify Playlist-ல், அவர் துருவ்வை முத்தமிடுவது போல DP இருந்துள்ளது. அது வைரலாகவே, இருவரும் டேட் செய்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால், இருவரும் இது குறித்து இன்னும் எதுவும் பேசவில்லை. இருவரும் பைசன் படத்தில் ஒன்றாக நடித்துள்ளது இதில் கூடுதல் தகவல்.
News April 12, 2025
3 ஆண்டுகளாக தொடர் மாதவிடாயால் தவிக்கும் பெண்!

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாதவிடாயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியவில்லை. அமெரிக்காவை சேர்ந்த பாப்பி இதனை நகைச்சுவையாக டிக்டாக்கில் பதிவிட, இவ்விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. மருத்துவ ரீதியாக அப்பெண்ணின் யூட்ரஸில் நீர்க்கட்டி கண்டறிந்த போதிலும் பிறவி குறைபாடு என்பதால் தீர்வு காணமுடியாமல் டாக்டர்கள் திக்குமுக்காடுகின்றனராம். So Sad!