News June 16, 2024
மீண்டும் நாய்க்கடி சம்பவம்

தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர் நிகழ்வாகி வருகின்றன. அந்தவகையில், சென்னை அடுத்த செங்கல்பட்டில் தெருவில் விளையாடிய 2 சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக கற்களை வீசி, நாய்களை விரட்டினர். இதைத் தொடர்ந்து, சிறுவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
ஓபிஎஸ்சுக்கு சபாநாயகர் பதவி வழங்க திட்டமிடும் திமுக

திமுகவில் இணைந்த OPS-க்கு முக்கியமான பொறுப்பு வழங்க ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. CM உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்த அவருக்கு, <<19251115>>திமுகவில் துணை பொதுச்செயலாளர்<<>> பதவி வழங்கப்படும் என அறிவாலய வட்டாரத்தில் ஏற்கெனவே பேச்சு அடிபட்டது. இந்நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், OPS-க்கு சபாநாயகர் பதவி வழங்கவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 1, 2026
அரசியல் கட்சிகளின் முதல்படி எப்போது?

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக+, அதிமுக+, நாதக, தவெக என 4 முனைப்போட்டி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது களத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் எப்போது தொடங்கப்பட்டன என்பதை மேலே உள்ள போட்டோஸை swipe செய்து பாருங்கள். SHARE
News March 1, 2026
இந்தியா வந்த கமேனி… எப்போது தெரியுமா?

ஈரானின் உச்ச தலைவராவதற்கு முன்பு, 1980-81 காலகட்டத்தில் கமேனி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகமுள்ள கர்நாடகாவின் அலிப்பூரில் ஹாஸ்பிடல் ஒன்றுக்கு அவர் அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல், ஸ்ரீநகரில் உள்ள மசூதி ஒன்றிலும் உரையாற்றிய அவர், காந்தி, நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்களை பாராட்டியும் பேசியுள்ளார்.


