News June 13, 2024
நாய்கள் கடித்த விவகாரம்: உரிமம் பெறுவதில் புதிய உச்சம்

சென்னையில் வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவங்களைத் தொடர்ந்து, செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்தாண்டு 1,560 பேர் உரிமம் பெற்றிருந்த நிலையில், 2024 ஜூன் 12ஆம் தேதி வரை 5,025 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
விஜய் களத்திற்கு வந்தபின் இது நடக்கும்: அண்ணாமலை

தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்தில் பல அரசியல் மாற்றங்கள் நிகழும் என பாஜகவின் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விஜய் போன்றவர்கள் களத்திற்கு வந்த பிறகு பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அண்ணாமலை அண்மையில் கூறி இருந்தார். விஜய் குறித்த அவரது கருத்தை எப்படி பார்க்குறீங்க?
News September 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 6, 2025
₹1.45 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த டாடா!

GST 2.0 எதிரொலியாக கார்களின் விலையை ₹65,000 முதல் ₹1.45 லட்சம் வரை குறைக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. சிறிய கார் மாடல்களான Tiago – ₹75,000, Tigor – ₹80,000, Altroz – ₹1.10 லட்சம், CurVV – ₹65,000 என விலை குறைக்கப்பட உள்ளது. அதேபோல், SUV மாடல்களான Harrier – ₹1.4 லட்சம், Safari – ₹1.45 லட்சம் விலை குறைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.