News January 1, 2025

60 லட்சம் பேர் காத்திருப்பது அரசுக்கு தெரியாதா?

image

அரசு வேலைவாய்ப்புக்காக 60 லட்சம் பேர் காத்திருக்கையில் ஆண்டுக்கு 10,701 அரசு வேலைவாய்ப்புகளை மட்டுமே வழங்குவது நியாயமா என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். TNPSCஇன் ஆண்டு அறிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், TNUSRB, மருத்துவத் துறை என மொத்தமாக 2024இல் 15,000 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைத்துள்ளதாகவும், அரசின் அலட்சியத்தால் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

Similar News

News September 19, 2025

செங்கோட்டையன் விவகாரம்: அதிமுக அவசர ஆலோசனை

image

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் AK செல்வராஜ் தலைமையில் கோபி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கோட்டையனுக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட இவரை கடந்த வாரம் செங்கோட்டையனின் ஆதரவாளராக இருந்த MLA பண்ணாரி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு அளித்திருந்தனர். கட்சியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்படலாம் என பேசப்பட்டு வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் கவனத்தை பெற்றுள்ளது.

News September 19, 2025

பிஹாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹1000

image

20-25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் என பிஹார் CM நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். முன்னதாக, 10, 12-வது தேர்ச்சி பெற்று, உயர்கல்வி படிக்கமுடியாத வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பட்டதாரிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வேலையில்லாதவர்களுக்கு ₹600 வழங்கப்படுகிறது.

News September 19, 2025

கோவையை கண்ட்ரோலில் எடுக்க திமுக போடும் ஸ்கெட்ச்

image

கோவையில் அதிமுக-பாஜகவுக்கான மவுசு கூடியிருப்பதாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அறிவாலயத்தை அலறச் செய்திருக்கிறதாம். இதனால் கோவை கிங் என கருதப்படும் செந்தில் பாலாஜியை வரும் தேர்தலில் கோவையில் களமிறக்கவும், கடந்த சட்டமன்றத்தேர்தலில் கரூரை கண்ட்ரோலில் வைத்திருந்த SB-யின் சகோதரர் அசோக்கை அங்கு நிறுத்தவும் தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!