News June 18, 2024
உங்கள் பெயர் “A” எழுத்தில் ஆரம்பிக்கிறதா?

ஜோதிட சாஸ்திரப்படி, தமிழில் அ, ஆ என ஆரம்பிக்கும் பொருள்கொண்ட ஆங்கில எழுத்தான A-வில் பெயர் தொடங்குவோரின் குணநலன்களைத் தெரிந்து கொள்வோம். *எந்த ஒரு விஷயத்தையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் *குறிக்கோளை அடைய உழைப்பார்கள் *தங்கள் திறமையை மற்றவர்கள் பாராட்ட நினைப்பார்கள் *அனைத்திலும் முன்னிலை வகிக்க நினைப்பார்கள் *மரியாதையை அதிகம் எதிர்பார்ப்பார்கள்.
Similar News
News November 14, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. அறிவித்தார் ஆட்சியர்

புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், நாளை பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளைய விடுமுறை ஈடுசெய்ய ஜன.3-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
Beef வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை!

நாட்டிலேயே முதல் முறையாக, குஜராத்தில், இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாக 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ல் அம்ரேலியில் சட்டவிரோதமாக மாடுகளை கொன்று 40 கிலோ இறைச்சியை வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
பிஹாரா இது! அமைதியாக நடந்த தேர்தல்

பிஹாரில் தேர்தல் என்றாலே கலவரமும் சேர்ந்தே நடக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த முறை வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்களும் பெரும் அளவில் திரண்டுவந்து வாக்களித்தனர். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த வன்முறை சம்பவங்களும் இல்லை. தற்போது வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இது நிச்சயம் நல்ல மாற்றம் தானே?


