News October 19, 2025
ஹெல்மெட் அணிந்தால் தலைமுடி உதிருமா?

பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது அவசியம். ஆனால், ஹெல்மெட் அணிவதால் தலைமுடி உதிர்வதாக பலரும் நினைக்கின்றனர். இந்த கருத்துக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அதேநேரம், இறுக்கமாக ஹெல்மெட் அணிவது, உட்புறம் சுத்தமில்லாமல் இருப்பது தலையில் வியர்வை மற்றும் அரிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே ஹெல்மெட்டை சுத்தம் செய்து, காற்றோட்டமாக அணிய அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News October 22, 2025
பெயரில் மாற்றம் செய்த ஹன்சிகா

ஹன்சிகாவின் விவாகரத்து சர்ச்சை ஒரு பக்கம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, அவர் திடீரென தன்னுடைய பெயரில் மாற்றம் செய்துள்ளார். அதாவது, ஆங்கிலத்தில் ‘Motwani’ என்பதை தற்போது ‘Motwanni’ என மாற்றம் செய்து இருக்கிறார். நியூமராலஜி படி பெயரை மாற்றினால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என ஹன்சிகா நம்புகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
News October 22, 2025
இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுார், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வீட்டில் பத்திரமாக இருங்கள்..!
News October 22, 2025
டிரம்ப் எச்சரிக்கைக்கு PM மவுனம் காப்பது ஏன்? காங்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கும் நிலையில் PM மோடி அமைதி காப்பது ஏன் என ஜெய்ராம் ரமேஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் டிரம்புக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்காமல் ஏன் வெளியுறவுத்துறை பின் மோடி மறைந்துகொள்கிறார் எனவும் காங்கிரஸ் சாடியுள்ளது. இங்கு மட்டும் சத்தமாக பேசும் மோடி வெளிநாட்டினரிடம் அடங்கி போவதாகவும் காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.