News December 6, 2024
Instagram யூஸ் பண்ணும் போது இந்த சிக்கல் வருதா?

USA, இந்தியா உள்பட பல நாடுகளில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 7 மணி முதல் இந்த பிரச்னை நீடித்து வருவதாகவும், மெசேஜ், ரீல்ஸ் என எந்த சேவையையும் பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு 30 mntsக்கும் 150 புகார்கள் பதிவாவதாக Downdetector தரவுகள் கூறுகின்றன. உங்களுக்கு இன்ஸ்டா வேலை செய்கிறதா செக் பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
கடலில் மூழ்கி பலியான 4 பேர் குடும்பத்திற்கு தலா ₹3 லட்சம்

எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு, CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த தேவகி, பவானி, ஷாலினி, காயத்ரி ஆகிய 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ₹3 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 1, 2025
செங்கோட்டையனுக்கு எதிராக ஆதாரம் வெளியிட்ட EPS

கடந்த 6 மாதங்களாக அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாலேயே செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாயிகள் நடத்திய நிகழ்ச்சியில், MGR, ஜெயலலிதாவின் போட்டோ இல்லை என நிகழ்ச்சியை புறக்கணித்த செங்கோட்டையன், கருணாநிதி போட்டோவுடன் இருந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் எனக் கூறி ஆதாரத்தை காட்டினார்.
News November 1, 2025
தனக்கு தானே அழிவை தேடிக்கொள்ளும் EPS: டிடிவி

EPS தனக்கு தானே அழிவை தேடிக்கொள்கிறார்; அவர் வீழ்ந்து விடுவார் என்று டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார். இப்போது இருப்பது அதிமுக அல்ல; எடப்பாடி திமுக (EDMK) என விமர்சித்த அவர், செங்கோட்டையன் தீவிரமான அதிமுக தொண்டன், திறமையான நிர்வாகி. அவரை நீக்கும் அளவுக்கு EPS-க்கு தகுதியில்லை என்றும் கொந்தளித்தார். 2026-ல் EDMK வீழ்த்தப்படுவது உறுதி; இதை யாராலும் தடுக்கமுடியாது எனவும் எச்சரித்தார்.


