News October 11, 2025
இரவில் தூங்கும்போது உடம்பில் இப்படி ஆகுதா?

சிலர் இரவில் தூங்கும்போது கால் கூசுவதை போல உணருவார்கள். ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும் போதும், சிலருக்கு வியர்வை, இதய துடிப்பு அதிகரிப்பு & வாய் வறண்டு போவதும் ஏற்படும். ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதன் அறிகுறியே இது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த அறிகுறிகள் தென்படும். எனவே, உங்களுக்கும் இரவு தூங்கும்போது, இப்படி நடந்தால், உடனே டாக்டரை அணுகுங்கள்.
Similar News
News March 10, 2026
விஜய்க்கு அழைப்பு.. அதிரடியாக நீக்கிய நயினார்

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
News March 10, 2026
திமுக – காங்கிரஸ் கூட்டணி சாத்தியமானது எப்படி? ப.சி

நீண்ட இழுபறியுடன் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில், அதுகுறித்து ப.சிதம்பரம் மனம் திறந்துள்ளார். பேச்சுவார்த்தை குழுவில் 2,3 பிற மாநிலத்தவர்கள் இருந்ததால் இடைவெளி இருந்தது; ஆனால் ஸ்டாலினுக்கு நெருங்கிய தான் பேசியதும் எல்லாம் சரியாகிவிட்டது என்றார். காங்கிரஸுக்கு திமுக துணையும், திமுகவுக்கு காங்கிரஸின் துணையும் வேண்டும். அதனால் கூட்டணி முறியாது என்பது தனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.
News March 10, 2026
BREAKING: செந்தில் பாலாஜிக்கு இரவில் வந்த அதிர்ச்சி

கரூரில் 41 பேர் பலியான வழக்கில் விஜய்யை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கும் CBI சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், <<19340950>>சம்மனை செந்தில் பாலாஜி<<>> வாங்க மறுத்ததோடு, இரவோடு இரவாக வழக்கறிஞர் அணியுடன் அவசர ஆலோசனையும் நடத்தியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜய்க்கு, CBI மூலம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக பேசப்படும் நிலையில், செந்தில் பாலாஜிக்கான சம்மன் விவகாரம் திமுக தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.


