News April 6, 2025
வாட்ச் மேனுக்கு இவ்வளவு வருமானமா? எப்படி?

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் வாட்ச் மேனாக பணியாற்றும் ராஜ்குமார் என்பவருக்கு ₹2.2கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். மாதம் ₹5,000 மட்டுமே ஊதியம் பெறும் அவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது PAN எண்ணை வைத்து பல கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. எளிய மனிதர்களின் ஆதார், PAN-ஐ வைத்து நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன.
Similar News
News April 7, 2025
வங்கக்கடலில் புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடலில் இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி(புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று(ஏப்.7) முதல் 12ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2025
எந்த மதத்தையும் பாஜக விட்டு வைக்க போவதில்லை: உத்தவ்

வக்ஃப் திருத்த மசோதாவை அமல்படுத்திய பிறகு, பாஜக தற்போது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பவுத்தர்கள் மற்றும் இந்து கோவில்களின் நிலங்கள் மீதும் கண் வைத்துள்ளதாக மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். எந்த சமூகத்தின் மீதும் பாஜகவுக்கு அக்கறை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். பாஜகவின் அத்துமீறல்களை அனைவரும் கண்களை திறந்து பார்க்க வேண்டும் எனவும் உத்தவ் வலியுறுத்தியுள்ளார்.
News April 7, 2025
புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசியில் இன்று விடுமுறை

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி மாவட்டங்களில் இன்று(ஏப்.7) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாற்றமின்றி நடைபெறும். SHARE IT