News August 20, 2024
ஷமிக்கு வாய்ப்பு இருக்கா?: ஜெய்ஷா சொன்ன பதில்

தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிக்கையை பொறுத்தே இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடுவாரா என்பது குறித்து தெரியவரும் என BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். கணுக்கால் காயம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஷமி எந்த போட்டியிலும் விளையாடவில்லை. தற்போது சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
Similar News
News March 26, 2026
FLASH: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்ட உடைமைகளையும் கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக மீனவர்கள் கைது பிரச்னை இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் அட்டூழியம் நடப்பதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
News March 26, 2026
நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை: சீமான்

திருடர்களிடம் ஆட்சியை கொடுத்ததால், திருடிய காசில் ₹1,000 ₹2,000 பங்கு கொடுக்கிறான் என சீமான் விமர்சித்துள்ளார். கல்வி, மின்சாரம், மருத்துவத்தை திமுக இலவசமாக்காதது ஏன் என கேட்டுள்ளார். இலவசம் கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி, வடமாநிலத்தவருக்கு வேலை வழங்குவதாகவும், வட மாநிலத்தவருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால், நாட்டை விட்டே வெளியேற வேண்டியதுதான் என்றும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
Impact Player விதி நீடிக்குமா?

2023-ல் கொண்டுவரப்பட்ட Impact Player விதியை தொடரலாமா என்ற கேள்விக்கு அனைத்து IPL டீம் கேப்டன்களிடமும் கலவையான பதில்களே வெளிப்பட்டதாம். குறிப்பாக, MI கேப்டன் ஹர்திக் & DC கேப்டன் அக்சர் ஆகியோர் எதிராக பேசினார்களாம். இருப்பினும் 2027 சீசன் வரை இந்த விதி தொடரும் என்பதால், அதன் பின்னரே முடிவெடுக்கப்படும். போட்டி நடுவில் ஒரு extra player-ஐ substitute ஆக கொண்டு வர வைப்பதே Impact Player விதி.. தேவையா?


