News April 10, 2024

டெல்லி அணியில் சேர்கிறாரா ரோஹித்?

image

அடுத்த ஐபிஎல் போட்டிக்கு டெல்லி அணியில் ரோஹித் ஷர்மா சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதையடுத்து 2 பேருக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அண்மையில் டெல்லி அணி உரிமையாளர் பர்த் ஜிண்டால், பண்ட் உடன் ரோஹித் பேசியதை வைத்து, அவர் டெல்லி அணியில் சேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News January 24, 2026

தேனி: மனைவி கோபித்து சென்றதால் கணவர் விபரீத முடிவு

image

ஆண்டிபட்டி க.விலக்கு பகுதியை சேர்ந்த தம்பதியர் தெய்வேந்திரன், சங்கீதா. தெய்வேந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சில தினங்களுக்கு முன் கணவருடன் கோபித்துக் கொண்டு சங்கீதா பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் விசாரணை.

News January 24, 2026

தமிழகத்தில் சாதி மதச் சண்டைகள் இல்லை: CM

image

அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளது என புள்ளி விவரங்கள் கூறுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் கவர்னர் உரைக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் சாதி, மதச் சண்டை, கும்பல் வன்முறை கிடையாது என்றார். எனவே கவர்னரின் பார்வை தான் பழுதுபட்டுள்ளது என காட்டமாக கூறினார். மேலும், கவர்னர் பதவியை அவரே (RN ரவி) அவமானப்படுத்துவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

News January 24, 2026

BREAKING: ஓபிஎஸ் – அமைச்சர் சேகர் பாபு திடீர் சந்திப்பு

image

சபாநாயகர் அறையில் OPS-ஐ அமைச்சர் சேகர் பாபு சந்தித்து 15 நிமிடங்கள் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து OPS-யிடம் சேகர் பாபு கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. OPS அணியில் இருந்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமான நிலையில், இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

error: Content is protected !!