News March 17, 2024

பிரதமருக்கு முன்கூட்டியே தேர்தல் தேதி தெரிந்ததா?

image

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் அடிக்கடி தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்தாரா? என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Similar News

News November 11, 2025

எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வது? தேஜஸ்வி

image

டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்து பேசியுள்ள தேஜஸ்வி யாதவ், இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அரசுடன் உறுதியாக நிற்போம் எனவும், நாட்டின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

News November 11, 2025

ஏன் வீட்டில் ஒற்றை ஊதுபத்தி ஏற்றி வைக்கக்கூடாது?

image

வீடுகளில் காலை, மாலை வேளைகளில் ஊதுபத்தி ஏற்றி வைப்பது வழக்கமே. ஆனால், அந்த ஊதுபத்தியை ஏற்றி வைக்க, சில வழிமுறைகள் உள்ளன. ஜோதிடத்தின் படி, வழிபாட்டின் போது ஊதுபத்தி ஏற்றினால், எப்போதும் 2 ஏற்றி வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அதே நேரத்தில், தெய்வங்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பலரும் அறியாத இந்த அரிய தகவலை அனைவருக்கும் பகிரவும்.

News November 11, 2025

தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

image

SIR-ஐ எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வைகோ, சண்முகம், திருமாவளவன், செல்வப்பெருந்தகை, முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவிற்கு எதிரான வாக்குகளை நீக்கவே SIR கொண்டு வரப்படுவதாக திமுக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

error: Content is protected !!