News April 16, 2025
நஸ்ரியாவுக்கு இப்படி ஒரு பிரச்னையா?

உறவினர்கள், உடன் பணியாற்றியவர்களுடன் பேசுவதை தவிர்த்ததற்கு நடிகை நஸ்ரியா மன்னிப்பு கேட்டுள்ளார். சில மாதங்களாகவே தனிப்பட்ட மன ரீதியான பிரச்னைகளால் அவதிப்பட்டதன் காரணமாகவே பேசுவதை தவிர்த்து வந்ததாகவும், தற்போது ஒவ்வொரு நாளும் மனதளவில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விரைவில் சகஜ நிலைக்கு திரும்பி அனைவரையும் தொடர்பு கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
சிக்மண்ட் ஃப்ராய்ட் பொன்மொழிகள்

*வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு. அவைகளால் மிகுந்த மகிழ்ச்சியையோ (அ) ஆழ்ந்த விரக்தியையோ ஏற்படுத்த முடியும்.
*காதல் என்பது ஒரு தற்காலிக மனநோய் நிலை.
*ஒருவரிடம் அவர் விரும்பியது இல்லாதபோது, தன்னிடம் இருப்பதை அவர் விரும்ப வேண்டும்.
*காதலிக்கும்போது ஒருவர் மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறார்.
*கனவுகள் நேற்றைய மிச்சத்திலிருந்து கட்டமைக்கப்படுகின்றன.
News November 27, 2025
பாஜகவுக்கு நன்றி கூறிய திருமாவளவன்

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், அரசியலமைப்பு குறித்த விவாதம் பேசுபொருளாகியிருக்காது என திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் பாஜகவின் ஆட்சி இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கரின் உழைப்பும் தெரிந்திருக்காது என்ற அவர், இதற்காகவே பாஜகவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். அத்துடன், SIR என்பது பாஜக & ECI-ன் கூட்டுச்சதி என்றும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
News November 27, 2025
சையது முஷ்டாக் அலி கோப்பையில் சாய் சுதர்சன்

அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிகளில், தமிழ்நாடு சீனியர் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று மிகப்பெரிய தோல்வியில் முடிந்த SA-க்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 15 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 14 ரன்களும் மட்டுமே சுதர்சன் எடுத்திருந்தார். இந்நிலையில் தான் அவர் சையது தொடரில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.


